Editorial / 2017 மே 30 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவுவதற்கு, சிங்கப்பூர் அரசாங்கமும் முன்வந்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், சிங்கப்பூர் அரசாங்கம், ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை (138,490 சிங்கப்பூர் டொலர்கள்) உதவியாக வழங்க முன்வந்துள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு, இந்த நிவாரண உதவி தொடர்பில், கடிதம் மூலமாக அறிவித்துள்ளனர்.
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து தாம் வருந்துவதாகவும் இலங்கை மக்கள் நிச்சயம் இந்த கடுமையான சூழலில் இருந்து மீண்டெழுவார்கள் எனத் தாம் நம்புவதாகவும் அதற்காக தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராகவுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அனர்த்த நிவாரண நிதியாக வழங்கப்படும் நிதி, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிதி திரட்டும் முயற்சியில் திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026