2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை தமிழ் அகதிகள் 26 பேர் மத்திய ஜாவா கடலில் மீட்பு

Super User   / 2010 மே 27 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் புகலிடம் கோரிச் சென்ற 26 இலங்கையர்கள் இந்தியக் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மத்திய ஜாவா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இந்தியக் கடற்பரப்பிலேயே மேற்படி 26 பேரும் படகுடன் தத்தளித்துக்கொண்டிருந்தமை தொடர்பில் அறியவந்துள்ளது.

குறித்த 26 இலங்கையர்களும் இந்தியக் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது இவர்களை மீனவர்கள் காப்பாற்றியதாக கரையோர பாதுகாப்பு பிரிவின் தலைவர் தெரிவித்தார். இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவது தொடர்பில் அதிகாரிகளால்  தற்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த சில வருடங்களாக இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தோனேஷிய கடற்பரப்பின் ஊடாக  ஆஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கோரி பிரவேசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


                          

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--