2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

இலங்கை வந்துள்ள மஹாதிர் முஹம்மத் இலங்கை பிரதமருடன் இன்று சந்திப்பு

Super User   / 2010 ஜூன் 08 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மத் இன்று பிரதமர் டி.எம் ஜயரத்னவை சந்திக்கவுள்ளார் என இலங்கைக்கான மலேஷியத்தூதுவர் ரொஸ்லி இஸ்மாயீல் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

தன்னுடைய துணைவியாருடன் இலங்கை வந்துள்ள மஹாதிர் முஹம்மத் இலங்கையின் வர்த்தக சமூகத்தின் அழைப்பின் பேரிலேயே வருகை தந்துள்ளதாகவும் ரொஸ்லி இஸ்மாயீல் கூறினார்.

எனினும்,கலாநிதி மஹாதிர் முஹம்ம்தின் விஜயம் உத்தியோகபூர்வமானது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

மலேஷிய முன்னாள் பிரதமர் கலாநிதி மஹாதிர் முஹம்மத் நாளை நாடு திரும்புவார் என இலங்கையிலுள்ள மலேஷியத்தூதரகம் தெரிவித்துள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--