2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

இலங்கை விவகாரத்தில் தலையிடாதிருக்க பான் கீ மூனிடம் கோரிக்கை

Super User   / 2010 மே 24 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூனை இன்று சந்தித்தார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகளின்போது இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைஉள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் பலவும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையிலேயே, வெளிவிவகார அமைச்சரின் இந்த அமெரிக்க விஜயம் இடம்பெற்றுள்ளது. இதன்போதே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் அமைச்சர் மேற்கண்டவாறான கோரிக்கையினை விடுத்துள்ளார்.

அத்துடன் இந்த விடயத்தினை மேலும் சிக்கலாக்க வேண்டாம் என்றும் அவரிடம் தெரிவித்துள்ள அமைச்சர், நாட்டு மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .