Princiya Dixci / 2016 மார்ச் 17 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு, திருச்சியில் சிறுமியொருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்த குற்றஞ்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த வி. பார்த்திபன் என்ற 38 வயது இளைஞனை, நேற்று புதன்கிழமை (16) அப்பிரதேச மகளிர் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரின் வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வேலை செய்து வந்துள்ளார். கைதுசெய்யப்பட்ட பார்த்திபன், ராஜியின் வீட்டில் வசித்து வந்துள்ளார் எனப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சிறுமி, தனக்கு நடந்தவை பற்றித் தாயாருக்குக் கூறியதையடுத்து இக்குற்றச் செயல் வெளிவந்துள்ளது.
சிறுமியின் தாய், மகளிர் பொலிஸாரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து பார்த்திபன் மீது குற்றஞ்சாட்டுக்களின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், அவரைக் கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago