Menaka Mookandi / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கை உயர்மட்டக் குழுவுக்கும் மலேசிய அரசாங்கத்துக்கும் இடையில், இன்று வெள்ளிக்கிழமை (16), ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந்நாட்டுப் பிரதமர் நஜீப் துன் அப்துல் ரசாக் ஆகியோருக்கிடையில், இன்று காலை, இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றதாக, அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி செய்தல் ஆகியனவே, இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாக உள்ளதென, ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். இந்நடவடிக்கைகளுக்கான முழு ஒத்துழைப்பையும் மலேசியா அரசாங்கம் வழங்கும் என்று, அந்நாட்டுப் பிரதமர், உறுதியளித்தார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026