Editorial / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எஸ்.கணேசன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக அனுசியா சிவராஜாவும் பிரதிப் பொதுச் செயலாளராக ஆறுமுகம் தொண்டமானின் புதல்வர் ஆ.ஜீவன் தொண்டமானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸின் மறைந்தத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 105ஆவது ஜனன தினம், கொழும்பு காலிமுகத் திடலில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலும் பின்னர், காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவானிலும், இன்று (30) காலை கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸின் தேசிய சபை, நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் தலைவரும் முன்னாள் பொது செயலாளருமான ஆறுமுகம் தொண்டமானின் தலைமையில் கூடப்பட்டுள்ளது.
இதில் இதுவரை பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த ஆறுமுகம் தொண்டமான் எம்.பி, காங்கிரஸின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன், பொதுச் செயலாளர் பதவிக்கு காங்கிரஸின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இயங்கி வந்த, மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் அனுசியா சிவராஜா தேசிய சபையில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளையில் பிரதிப் பொது செயலாளராக தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் புதல்வர் ஜீவன் தொண்டமான் எவ்வித எதிர்ப்புகளும் இன்றி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என, பிரதி அமைச்சரும் இ.தொ.காவின் போசகருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
16 minute ago
19 minute ago
20 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
20 minute ago
25 minute ago