2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இ.தொ.கா சார்பில் ஐவர் போட்டி

கே.எல்.ரி.யுதாஜித்   / 2020 மார்ச் 14 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆ.ரமேஸ்)

நாடாளுமன்ற  பொது தேர்தலில்  நுவலிரெயா மாவட்ட தேர்தல்  தொகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  சார்பில் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். 

அந்த  வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  சார்பில் அச்சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் , முன்னாள்  மத்திய  மாகாண சபை உறுப்பினர்களான மருதுபாண்டி ரமேஸ்வரன், பி.சக்திவேல்,  கணபதி கணகராஜ்,  எ.பிலிப் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில்  தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும்  எம்.ரமேஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது நபராக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரையா அல்லது உபதலைவர் பி.சக்திவேலா என்ற சந்தேகமும் போட்டியும் நிலவி வந்தது.

இந்த நிலையில்  காங்கிரஸ் உயர் பீடம் கூடி ஐவரை தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஸ்ரீலங்கா  பொதுஜன சுதந்திர முன்னணியில் இவர்கள் நுவரெலியா மாவட்டத்தில்  போட்டியிடவும் அனுமதி கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .