2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

உடலில் காயங்களுடன் சுற்றித்திரியும் யானை

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொசான் துசார தென்னகோன்

35 வயதான யானையொன்று, உடலில் காயங்களுடன் இன்றைய  தினம் (16) பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர பகுதியில் சுற்றி திரிந்துள்ளது.

குறித்த யானையின் பாதங்கள், கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் காயங்கள் காணப்படுவதாகவும், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களே இவ்வாறு யானையின் உடலில் காணப்படுவாக, வனஜீவராசிகள் அதிகாரிகள் குறிப்பிட்டதாகப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

 

அங்கம்மடில்ல தேசிய வனத்திலிருந்து, பராக்கிரமபாகு சமுத்திரம் பகுதிக்கு வருகைத் தந்துள்ள குறித்த யானையின் காயங்களுக்கு, பொலன்னறுவை வனஜீவராசிகள் அதிகாரிகள் சிகிச்சையளித்து வந்தாலும்,அதன் காயங்கள் இன்னும் குணமடையவில்லை என்றும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .