2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

உண்ணாவிரதமிருக்கும் கைதிகளைச் சந்தித்தார் சுமந்திரன்

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

குறுகியகால புனர்வாழ்வு வழங்கி தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்றாவது நாளாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இன்றுடன் மூன்றாவது நாளாக ம. சுலக்‌ஷன், இ. திருவருள், சூ.ஜெ யச்சந்திரன், இரா. தபோரூபன், சி. தில்லைராஜ், இ. ஜெகன், சி. சிவசீலன், த. நிர்மலன் ஆகிய தமிழ் அரசியல் கைதிகள் எண்மர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

இவர்களுடைய பிரதான கோரிக்கை தங்களை குறுகியகால புனர்வாழ்வு வழங்கி தங்களை விடுதலை செய்யவேண்டும் என்பதாகும். 

இந்நிலையில், சுமந்திரன், வட மாகாண சபை உ றுப்பினர் கே. சயந்தன் ஆகியோர் இன்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்கு உணவு தவிர்ப்புப் போரா ட்டத்தை நடாத்திவரும் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--