2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

உணர்ச்சியைத் தூண்டும் மருந்தை விற்றவர் கைது

Editorial   / 2017 ஜூலை 22 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, உணர்ச்சியைத் தூண்டக்கூடிய வகையினான ஒரு வகை மருந்துகளை வைத்திருந்த, கடை உரிமையாளர் ஒருவரை, நீர்கொழும்பு பொலிஸார், நேற்று (21) கைது செய்துள்ளனர்.

பாடசாலை மாணவர் ஒருவரால், பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், நீர்கொழும்பு பகுதியிலுள்ள கடையொன்றில், பொலிஸார் திடீர் சோதனையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, கடையின் பின்புறத்தில், புதைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த, சுமார் 3 கிலோகிராம் நிறையைக் கொண்ட, 300 மாத்திரைகளை மீட்டுள்ளனர். இந்த மாத்திரைகள், போதை மருந்துகளை உட்கொள்ளும் போது ஏற்படும் போதைவிட அதிகமான போதையைத் தரும் என்பதால், பாடசாலை மாணவர்கள், இவ்வாற மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்வதாக, முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .