2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

உயர் கல்வி அமைச்சராக எஸ்.பி திஸாநாயக்க நியமனம்

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் கல்வி அமைச்சராக எஸ்.பி திஸாநாயக்க நியமிக்கப்படவிருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் ஆளும் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்ட எஸ்.பி.திஸாநாயக்க, கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 100,000 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

தொழிற்பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் போன்ற துறைகளும் எஸ்.பி. திஸநாயாக்கவிற்கு வழங்கப்படவிருக்கும் அமைச்சின் கீழ் கண்காணிக்கப்படவுள்ளதாக அந்த வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும், நாவலப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை இடம்பெற்றதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .