2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பம்

Super User   / 2010 ஜூன் 23 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் இன்று காலை 10.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிறது.

மாநாட்டு சிறப்பு மலரை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்ட பின், நிதியமைச்சர் அன்பழகன் உரையாற்றவுள்ளார்.

இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

பேராசிரியர் அஸ்கோ பர்போலா உரையாற்றிய பின்னர்,  அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையுரையையும்,  சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரையையும், பிரதீபா பாட்டீல் தொடக்கவுரையையும் ஆற்றவுள்ளனர்.

இதனையடுத்து, இன்று மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழர் இலக்கியம், கலை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

இன்று ஆரம்பமாகும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--