2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

உலகின் முதல் மொழி தமிழ் ஆகும்; ஆரம்ப விழாவில் கருணாநிதி முழக்கம்

Super User   / 2010 ஜூன் 23 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல் மொழி என்ற தகுதி படைத்தது தமிழ் மொழி மாத்திரமே என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

கோவையில் இன்று காலை கோலாகலமாக ஆரம்பமான உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

இயற்கையோடு இயைந்த மொழி என்பதால் தமிழ் உலகின் முதல் மொழியானது என்றும் மேலும் அவர் கூறினார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரையையும், முனைவர் வா.செ.குழந்தைசாமி, அமெரிக்க நாட்டு பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், இலங்கை நாட்டு பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்துரையையும் ஆற்றியுள்ளனர்.

அத்துடன், தமிழக நிதியமைச்சர் பேராசிரியர்  க.அன்பழகன் தகுதியுரையையும், தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா சிறப்புரையையும் நிகழ்த்தியுள்ளனர்.  Comments - 0

 • nuah Wednesday, 23 June 2010 09:19 PM

  மண்தோன்றி முன் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழ். திராவிட என்று இலங்கையில் தவறாக கூறப்பட்டாலும் ஆதியில் தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகியமொழிகள் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன. ஆகவே அப்பெருமை இம்மொழிகள் எல்லாவற்றுக்கும் சேரும் என்று குடியரசுத்தலைவிக்கு எழுதி கொடுத்திருந்தால் நன்றாகவே வாசித்து இருப்பார். இந்தி எதிர்ப்பு, கன்னட எதிர்ப்பானது, காலத்தின் கோலமே, கழக ஆட்சிகளின் சாதனை. விலைவாசியை பற்றியோ தண்ணீர் பற்றியோ மக்கள் சிந்திக்க வேண்டியதில்லை. வாழ்க தமிழ்! வாழ்க கலைஞர்! முழங்கட்டும் கோஷங்கள்!

  Reply : 0       0

  sheen Sunday, 27 June 2010 10:41 PM

  இது தமிழ் மாநாடு அல்ல தி.மு.க மாநாடு என்று வைகோ கூறுகின்றார். தமிழ் அல்ல தமிழர் பற்றி பேசி இருக்க வேண்டுமாம். தமிழரைப் பற்றி தான் நாம் நிதமும் பேசுகின்றோமே. காவிரி பற்றியும் கன்னடம் பற்றியும் பேசி இருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். பா.ஜ.க.காரர்கள் தமிழ் மீது பற்று கொண்டவர்களாம். இந்தி படிக்க விரும்பாதவர்கள் போலும். இவர்களில் எத்தனைபேருக்கு தமிழிலேயே பேச எழுத இயலும் காமராஜரை போல? அவர் காலத்திலே இந்தி எதிர்ப்பு என்று பதவிக்குவந்தவர்கள் தாம் தொலைக்காட்சியிலே இந்தியை பரத்தினவர்கள் வானொலியில் இந்தி என்?

  Reply : 0       0

  xlntgson Thursday, 01 July 2010 09:26 PM

  வானொலியில் அந்த காலகட்டத்தில் அதாவது தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது தமிழ் நிகழ்சிகளை நிறுத்தி ஒரு பத்து நிமிடம் இந்திச்செய்தி சொல்வார்கள் அவ்வாறு செய்வது இந்தியை திணிப்பது என்று போராடி நிறுத்தியவர்கள் பின்னர்- தொலைக்காட்சி & சின்னத்திரை மூலம் ராமாயணம் போன்ற நிகழச்சிகள்- இந்தி தமிழ் சமகால ஒளிபரப்புகளின் மூலம் தமிழ்நாடு முழுவதும் வடமொழி வியாபித்துவிட்டது. மணிரத்தினம் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் சாட்சி! எல்லாப்படங்களையும் இவர்கள் இருமொழிகளிலும் சமகாலத்தில் வெளியிடுகின்றனர் சகோதர மொழிகள் போல!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--