2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: முட்டுக்கட்டைகள் ஓகஸ்டில் நீங்கும்

Gavitha   / 2016 ஜூலை 18 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதில் காணப்படும் முட்டுக்கட்டைகள் அனைத்தும், எல்லை மீள்நிர்ணயம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவின் அறிக்கை, ஓகஸ்ட் 15ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதும் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான அசோக பீரிஸ் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இச்செயற்குழுவின் தகவல்களின்படி, புதிய தேர்தல் முறைமையின் கீழ் இத்தேர்தல்களை நடத்துவதற்காக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வது தொடர்பான முரண்பாடுகள் அனைத்தும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தேர்தல், பிரநிநிதித்துவத் தேர்தல் முறைமையையும் விகிதாசாரத்; தேர்தல் முறைமையையும் கலந்ததாக நடத்துவதற்கு முயலப்படுகிறது.

தற்போதைய சட்டத்தின்படி, தேர்தல்கள் திணைக்களத்தினால் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு, வர்த்தமானி அறிவித்தல்
ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு, குறித்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் அறிவிக்க வேண்டும். அத்தோடு, தெரிவுசெய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும், அமைச்சர் அறிவிக்க வேண்டும்.

இச்செயற்குழுவின் அறிக்கை வெளியானவுடன், தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வாய்ப்பு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குக் கிடைக்கும்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அசோக பீரிஸ், வடக்கிலும் கிழக்கிலும் உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .