Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரைக் கொலை செய்வது குறித்து, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக தி சில்வா தன்னிடம் தெரிவித்ததாக, ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் நாமல் குமார கண்டியில் ஆற்றிய உரை குறித்த செம்மைபடுத்தப்படாத காட்சிகளை இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.
நான்கு ஊடக நிறுவனங்களிடமே நீதவானால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸ்மா அதிபரின் ஆணைக்கமைய, தாம் விசரணைகளை ஆரம்பித்துள்ளதாக, நீதிமன்றில் அறிவித்த இரகசியப் பொலிஸ் அதிகாரிகள் குறித்த விசாரணைக்காக, நாமல் குமார ஆற்றிய உரையின் செம்மைப்படுத்தப்படாத காட்சிகள் தமக்கு அவசிமெனத் தெரிவித்து, முன்வைத்த காரணங்களை கவனத்திற்கொண்டே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago