2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

ஊடக பிரச்சினைகளுக்கு அரசியலை இணைக்க வேண்டாம் - கெஹலிய

Super User   / 2010 மே 13 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசியலை இணைத்துக்கொள்ள வேண்டாம் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் ஏக்நலிகொட தொடர்பில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டில் போர் இடம்பெற்ற சூழல் மற்றும் அதன் பின்னரான நாட்டின் நிலைப்பாடு குறித்த புரிந்துணர்வு அனைத்து தரப்பினருக்கும் காணப்படல் வேண்டும் என்றும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--