Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 21, வியாழக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 27 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 9 பேருக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன், சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை இரசியமாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்துவைக்கும் நோக்கில், கடத்தியமை மற்றும் கொலை செய்தமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான, சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
பிணை வழங்கப்பட்ட பிரதிவாதிகள் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், அவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
44 minute ago
3 hours ago