Gavitha / 2016 மார்ச் 24 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையில் செய்து கொள்ளவிருக்கும் எட்கா உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை (23) கொழும்பில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.
70 தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு பேரணியை கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த எதிர்ப்பு பேரணியில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், தொழிநுட்பவியலாளர்கள், கலைஞர்கள், கணக்காளர்கள், மனிதவள ஆர்வலர்கள் உள்ளிட்ட 70 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிநுட்ப வல்லுனர்களின் அமைப்பின் பணிப்பாளரும், பொறியியலாளருமான உபாலி ரத்ணாயக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவுடன் செய்துகொள்ளவிருக்கும் குறித்த எட்கா ஒப்பந்தத்தினால் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என பலமுறை அரசாங்கத்திடம் வலியுறுத்தியும் அரசாங்கம் அவற்றை கவனத்தில் கொள்ளாமல் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில் அதிக அக்கறை காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
25 minute ago
26 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
26 minute ago
37 minute ago
45 minute ago