2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

எண்ணெய் கசிவு சுத்திகரிப்பு நடவடிக்கைகள் பூர்த்தி

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எண்ணெய் கசிவை தூய்மையாக்கவும் கட்டுப்படுத்தவும் கடல் பாதுகாப்பு அதிகார சபை, படையினர் மற்றும் பொலிஸார் வழங்கிய பங்களிப்புக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நன்றி தெரிவித்துள்ளது.

 

கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டிருந்த பகுதியை தூய்மையாக்கும் பணிகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. கடல் பாதுகாப்பு அதிகார சபை வழங்கியிருந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலை தொடர்ந்து, பாரியளவில் காணப்பட்ட கசிவை செப்டெம்பர் 12ஆம் திகதியன்று முழுமையாக தூய்மையாக்கியுள்ளதுடன், சிறு குழுக்கள் தற்போதும் கடற்கரை பகுதிகளை தூய்மையாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணமுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கடல் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் நிறுவனம், கடற் பாதுகாப்பு படை மற்றும் இலங்கை கடற்படை போன்றன ஈடுபடும் எனவும் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--