2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

'எதிர்கால அச்சுறுத்தல்; எதிர்கொள்வதில் அதிக கவனம்’

Editorial   / 2020 மார்ச் 02 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தீவிரமயமாக்கல், பயங்கரவாதம் மீள் எழுச்சி, பிரிவினைவாதம், மத தீவிரவாதம், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உள்ளக வேலைநிறுத்தங்கள் என்பன பிரதான சவால்களாக காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தனது முழுக்கவனத்தையும் செலுத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் உள்ள இலங்கை பவுண்டேஷன் நிறுவனத்தில் நடைபெற்ற சமூக ஊடக நிபுணத்துவ அமைப்பின் தொழில்துறை நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X