2021 மே 12, புதன்கிழமை

'எனக்கு ஒருவரே உள்ளார்'

Niroshini   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு பெருமளவான ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருக்கும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல,  தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சில், எனக்கு ஒரேயொரு ஆலோசகர் மட்டுமே இருக்கின்றார். அவர், கலாநிதி விமல் குணவர்த்தன ஆவார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்றுத் திங்கட்கிழமை(01) இடம்பெற்ற ஊடகவியளார்கள் சந்திப்பின்போது, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சில், எனக்கென ஒரேயொரு ஆலோசகர் மட்டுமே இருக்கிறார். ஏனையோர் வீதி செயற்றிட்டங்களை நிறைவேற்றுகையில் பொதுமக்களின் கரிசனைகளுக்கு தீர்வு வழங்குவதற்காகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உதவுவதற்காகவும் வீதி அதிகாரசபையினால் நியமிக்கப்பட்டவர்கள் என அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .