2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.கவின் மறுசீரமைப்பு அறிக்கை ஜுலை முதலாம் திகதி ரணிலிடம் கையளிப்பு

Super User   / 2010 ஜூன் 27 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்  ரணில் விக்கிரமசிங்ஹவிடம் எதிர்வரும் வியாழக்கிழமை  அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தலைமையிலான மறுசீரமைப்புக் குழு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளது.

இந்நிலையில், நாளை திங்கட்கிழமை இது தொடர்பில் ஆலோசனைகள் நடைபெறவிருப்பதுடன், எதிர்வரும் வியாழக்கிழமை ரணில் விக்கிரமசிங்ஹவிடம் அறிக்கை கையளிக்கப்படும் எனவும் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

கடந்த வாரங்களில் மறுசீரமைப்புக் குழு சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்ததாகவும்  அவர் கூறினார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில், இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜோசப் மைக்கல் பெரேரா குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--