2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஐ.தே.க முன்னாள் எம்.பியின் மகன் சடலமாக மீட்பு

Editorial   / 2017 ஜூலை 14 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன், மாத்தறை - மடிஹ பிரதேச ஹோட்டல் அறையொன்றில், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இன்று (14) சடலமாக மீட்கப்பட்டார்.

மாத்தறை, பம்புரண பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட யசசிரு திசர குமார கலப்பத்தி (வயது 24) என்ற இளம் வர்த்தகரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தியின் புதல்வரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர், தென்மாகாண சபை உறுப்பினர் சத்துர கலப்பத்தியின் இளைய சகோதரருமாவார்.

உயிரிழந்த யசசிரு, நேற்று (13) இரவு முழுவதும் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .