2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஐ.தே.க.வின் எம்.பி. ரங்கே பண்டாரவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு

Super User   / 2010 ஜூன் 22 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் அலரி மாளிகையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதியின் விசேட அழைப்பினை ஏற்று தமது குடும்ப சகிதம் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் தான் தாக்குதலுக்கு உள்ளான போது தனக்கும், தனது குடும்பத்துக்கும் உதவி செய்த ஜனாதிபதிக்கு இந்த சந்திப்பின் போது நன்றியினைத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

அத்துடன், கடந்த வாரம், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது அவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்ததாகவும் ரங்கே பண்டார எம்.பி. தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்காகவே ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுவதாக ரங்கே பண்டாரவிடம் கேட்ட போது அதற்கு பதிலளித்த அவர், எவர் என்ன கூறினாலும் அவர்களுக்கெல்லாம் பதிலளிக்கத் தான் தயாரில்லை என்று சுட்டிக்காட்டினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--