2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

ஐ.நா நிபுணர்கள் குழு நியமனத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஜூன் 28 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின்  செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நியமித்திருக்கும் நிபுணர்கள் குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆர்ப்பாட்டம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்செயல்கள்  தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன்  நிபுணர்கள் குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--