2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஐ.நா.வுடன் இலங்கை உயர்மட்டப் பேச்சு

Super User   / 2010 ஜூலை 07 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு ஐ.நா. அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதையடுத்து இலங்கை அரசாங்கம் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. அதிகாரிகளுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. இக்கலந்துரையாடல்களின்போது, கொழும்பிலுள்ள ஐ.நா. உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்புத் தொடர்பாக இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளித்ததாக ஐ.நா. இணைப்பேச்சாளர் சோய் சோங் - அஹ் டெய்லிமிரர் இணையத்தளத்தற்குத் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹென ஆகியோரே இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளதாக சோய் சோங் - அஹ் கூறியுள்ளார்.

ஐ.நா. தற்போது பாதுகாப்பு மதிப்பீடுகளை மேற்கொள்வதாகவும் கொழும்பு ஐ.நா. அலுவலக உத்தியோகஸ்தர்கள் விரைவில் மீண்டும் பணிக்குத் திரும்புவர் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--