2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ஒன்றிணைந்து செயற்படுவதால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முடியும் - ரணில்

Super User   / 2010 ஜூன் 04 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்களில் தொடர்ந்தும் தோல்வியை தழுவுகிறோம் என்று புலம்பிக்கொண்டிருக்காது அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் வெற்றியினை தமதாக்கிக்கொள்வது கடினமில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐ.தே.க.வின் கோட்டை பிரிவின் இணப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான ஸ்ரீலால் லக்திலக்கவை வரவேற்கும் நிகழ்வொன்று இன்று முற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுறக்கோட்டையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

கட்சியொன்றுக்கு சிறந்த உறுப்பினர்களைப் போன்று நல்ல ஆதரவாளர்களும் இருத்தல் வேண்டும். அதனால் அதற்காக விண்ணப்பிப்பதற்கு எவருக்கும் முடியும் என்றும் அவர் சொன்னார்.

தற்போது நடபெற்றுவரும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்காக அரசாங்கம் 70 கோடி ரூபாவினை செலவிட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், பென்ஸ் கார்களின் விலைகளைக் குறைத்த அரசாங்கம் டின் மீனின் விலையைக் குறைக்கவில்லை என்றும் எடுத்துக்கூறினார்.   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--