2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஒரு மாதத்துக்குள் நான்கு பிச்சைக்காரர்கள் படுகொலை; ஒருவரின் சடலம் நேற்று மீட்பு

Super User   / 2010 ஜூன் 16 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் கடந்த மாதம் மூன்று பிச்சைக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் மற்றுமொரு பிச்சைக்காரரின் சடலமொன்று கொம்பனி வீதி பகுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறித்த இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை அல்ல என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரணம், ஆரம்பத்தில் இடம்பெற்ற மூன்று பேரது படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாக அவர்கள் கூறினர்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற படுகொலை சம்பவம் குறித்த விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

இனந்தெரியாத நபரொருவரினால் தலையில் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கொம்பனி வீதி, கங்காராம எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகிலிருந்து பிச்சைக்காரரொரிவரின் சடலமொன்று நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த மாதம் கொழும்பு - கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி மற்றும் பம்பலப்பிட்டி போன்ற பிரதேசங்களிலிருந்து பிச்சைக்காரர்கள் மூவரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.

இந்த படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0

 • Alga Thursday, 17 June 2010 03:33 AM

  நல்ல விடயம் தானே, கொலை செய்தவன் வாழ்க.......

  Reply : 0       0

  xlntgson Thursday, 17 June 2010 08:52 PM

  கொலை நல்ல விடயமா, நாம் இதுவரை காத்து வரும் உயரிய விழுமியங்கள் என்ன ஆவது? இனிமேல் வாகன ஓட்டிகள் ஒரு பிச்சைக்காரரை கண்டால் நிறுத்த வேண்டியதில்லை மேலே விடலாம்! நாய் பூனை எதுவாக இருந்தாலும் சரி ஏற்றிக்கொண்டு போகலாம் யார் இவர்களுக்காகவெல்லாம் பேச வரப்போகின்றார்கள். அதோடு அனாதைகளையும் அகதிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். மனித உரிமை என்றால் என்ன, என்று இனி வரும் சமுதாயம் கேட்கலாம்.

  Reply : 0       0

  nuah Friday, 18 June 2010 07:59 PM

  பிச்சைக்காரர்கள் மோசமானவர்கள் அல்ல அதைவிட மோசம் கௌரவபிச்சைக்காரர்கள் இவர்கள் நிதி சேகரிக்கும் போர்வையில் எங்கும் திரிகிறார்கள், ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுக்கலாம் கொடுக்காமல் இருக்கலாம் ஆனால் கௌரபிச்சைக்காரர்கள் மறைமுக மிரட்டல் முறையில் கோஷ்டியாக வருவார்கள், அரசியல்கட்சிகள் விதிவிலக்கல்ல, ஜாதிமத இன விளையாட்டுகழக வேற்றுமைகள் மட்டுமல்ல பாடசாலைபிள்ளைகளையும் ஈடுபடுத்துகின்றார்கள். பிச்சைக்காரர்களை கொல்வதானால் எவ்வளவுபேரை கொல்ல? நியாயமானஉரிமைகளை கூட பிச்சைகேட்டமாதிரிதான் கேட்கவேண்டிய நிலை இருக்கிறது!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .