2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஓட்டமாவடியில் வன்முறை : மு . கா ஆதரவாளரின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு ; அமைச்சர் அமீரலி மறுப்பு

Super User   / 2010 மார்ச் 16 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்


EXCLUSIVE மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் எம்.பி.எம். ஹுசைனின் சகோதரரான அஜ்வாத் என்பவரின் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் அமைச்சர் அமீரலியின் பாதுகாப்புப்பிரிவினரே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அஜ்வாத் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

இச்சம்பவம் இரவு எட்டு மணியளவில் இடம்பெற்றதாகவும்,அமைச்சர் அமீரலியின் குழுவினர் வன்முறைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாழைச்சேனை பொலீஸ் நிலையத்தில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அஜ்வாத் கூறினார்.

இதுகுறித்து விசாரிக்க தமிழ்மிரர் இணையதளம் உடனடியாக அமைச்சர் அமீரலியுடன் தொடர்புகொண்டது.

தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும்,வாகனம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி தாம் அறிந்திருக்கவில்லை என்றும் அமைச்சர் அமீரலி பதிலளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .