2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கட்டுநாயக்கவில் பாகிஸ்தான் பிரஜை கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.ஜீ.கபில

பிரவுன் சுகர் வகையைச் சேர்ந்த, ஒரு தொகை ஹெரோய்னை, சட்டவிரோதமானமுறையில் இலங்கைக்கு எடுத்துவந்த பாகிஸ்தான் நாட்டுப் பிரஜையொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (17) ​அதிகாலை, கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய பாகிஸ்தான் நாட்டு பிரஜையே  கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரிடமிருந்து, ஒரு கிலோ 606 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்  மொத்த பெறுமதி 1,60,60,000 ரூபாய் என, கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

               

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .