2021 ஜனவரி 27, புதன்கிழமை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் மின்சார தடை

Editorial   / 2019 நவம்பர் 09 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (09) முற்பகல் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முற்பகல் 8.50 மணியளவில் இந்த மின்சார தடை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பிரதான மின்கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 30 நிமிடங்கள் இந்த மின்சார தடை நீடித்துள்ள நிலையில், விமான நிலைய குடிவரவு - குடியகழ்வு பிரிவு உள்ளிட்ட அனைத்து பணிகளும் தாமதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .