2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கூட்டமைப்பினர் இன்று இந்தியா பயணம்

Super User   / 2010 ஜூலை 04 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அறுவர் அடங்கிய குழுவொன்று, மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இந்தியா பயணமாகவுள்ளது.

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கில் பயணிக்கவுள்ள இந்த குழுவில், கூட்டமைப்பு உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாதுரை விநாயகமூர்த்தி, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்த விஜயத்தின் போது தமிழ் மக்களிடம் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதன்போது, இந்திய பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் ஆகியோருடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .