2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸார் வீடியோ ஒளிப்பதிவு;விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக தேசிய முன்னணியின் சட்டத்தரணி வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தவேளை, கோட்டை பொலிஸார் வீடியோ ஒளிப்பதிவு செய்தமை தொடர்பில்  விசாரணை நடத்துமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம், கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.

கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை கண்டித்துள்ள நீதிமன்றம், இந்த குற்றச்சாட்டு உண்மை என நிருபிக்கப்பட்டால் இது பாரிய குற்றம் ஆகும் எனவும் தெரிவித்தது.

எனினும், கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னராக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரி   ஜனநாயக தேசிய முன்னணியினர் கூட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இது தேர்தல் சட்ட விதிகளை மீறுவதாகக் கூறி   கோட்டை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமொன்றை பதிவு செய்யுமாறு ஜனநாயக தேசிய முன்னணியின் முக்கிய உறுப்பினர்களான விஜித்த ஹேரத், சுனில் ஹந்துன்நெத்தி, அர்ஜூன ரணதுங்க, லக்ஸ்மன் நிபுணாராய்ச்சி மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா ஆகியோருக்கு  கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ன அறிவுறுத்தியிருந்தார்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .