Editorial / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
முத்துராஜவல எண்ணெய் களஞ்சிய கட்டடத் தொகுதிக்கு, எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, திக்ஓவிட்டயிலிருந்து, உஸ்வெட்டகெய்யாவ வரையான கடற்கரை பகுதிகளில் படர்ந்துள்ள எண்ணெய்ப் படையை நீக்குவதற்கான நடவடிக்கையை , சுற்றாடல் மேற்பார்வை கடற்படை மற்றும் கனிய எண்ணெய் வள கூட்டுதாபனத்தின் அறிவுரைக்கமைய, கடற்பாதுகாப்பு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
நேற்றிரவு கப்பலொன்றிலிருந்து கருப்பு நிற எண்ணைய் இறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், முத்துராஜவல குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, அதிலிருந்து கசிந்த எண்ணெய் கடலுடன் கலக்கத் தொடங்கியது. இதனையடுத்து, இதனைக் கட்டுப்படுத்தி, இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தடுப்பதற்காக, கடற்படையினர் உள்ளிட்டவர்கள் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கைகாக, ஜப்பான் அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள சாமரக்சா, சமுத்திரக்சா ஆகிய கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
38 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
59 minute ago
1 hours ago