2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

'கடலுக்குச் செல்ல வேண்டாம்'

Thipaan   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கேசன்துறையிலிருந்து, 400 கிலோமீற்றர் தொலைவில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வர்தா புயல் காரணமாக, வடக்கு, வடகிழக்கு மற்றும் மன்னார் கடற்பரப்பை அண்மித்துள்ள மீனவ சமுதாயம் மற்றும் கடற்படையினரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

புயலானது, இந்தியாவின் மேற்குப் பக்கமாக நகர்ந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அந்தத் திணைக்களம், 100-120 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் காங்கேசன்துறையிலிருந்து 200-300 கிலோ மீற்றர் தூரத்தில் கடும் மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.

கடற்படை நடவடிக்கைகளுக்கும் மீன்பிடிக்கும் பொருத்தமில்லாத வகையில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால், கடலுக்குச் செல்வது அபாயமானது என எச்சரித்துள்ள திணைக்களம், புயலினால் நாட்டுக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படாது எனவும் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .