மு.இராமச்சந்திரன் / 2017 ஜூன் 01 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில், தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையிலான வகுப்புகளுக்கு இன்று (01) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கற்கும், மண்டபங்களுக்கு பின்பக்கத்திலிருந்து பாரிய கற்கள் புரண்டு வருவதுடன், மண்சரிவு அபாயம் ஏற்பட்டமையால்,
தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டதாகவும், அந்த வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை நேற்று (31) நேரகாலத்துடன் அனுப்பிவைத்து விட்டதாகவும் வித்தியாலயத்தின் அதிபர்
டி .தெய்வேந்திரன் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்புக் கருதி, ஹட்டன் வலய கல்வி பனிமனையின் அனுமதியுடன் தற்காலிகமாக மேற்குறிப்பிட்ட வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .