2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

கண்காணிப்புக் கப்பல் உத்தியோகபூர்வமாக கடற்படையிடம் ஒப்படைப்பு

Yuganthini   / 2017 ஜூலை 23 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட, இலங்கை கடற்படையிடம் இருக்கின்ற மிகவும் விசாலமான ஆழ்கடல் கண்காணிப்பில் ஈடுபடும் கப்பலானது உத்தியோகபூர்வமான ரீதியில், இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோவை துறைமுகத்தில் வைத்து தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பலில், சிறிய ரக ஹெலிக்கொப்டர்களை இறக்குவதற்கான இறங்குத் தளமொன்றும் உள்ளது.

இந்தக் கப்பலை, இலங்கைக் கடற்படையினரிடம் உத்தியோகபூர்வமான முறையில், அதிகாரப்படுத்துவதற்கான பிரதான வைபவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஓகஸ்ட் 2ஆம் திகதியன்று இடம்பெறும்.

105.7 மீற்றர் நீளமான இந்தக் கப்பல், 13.6 மீற்றர் அகலமானது. இந்தக் கப்பல், மணித்தியாலத்துக்கு 24 கடல்மைல், ஆகக் கூடிய வேகத்தில் பயணிக்கும். 2,350 டொன் கொள்ளளவை கொண்ட இந்தக் கப்பலில், 18 அதிகாரிகளும் கடற்பணியாளர்கள் 100 பேரும் பயணியாற்றமுடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .