Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஷிவானி
கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளைத் துரித்தப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரமொன்றை, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்தார். அதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
யுத்த மோதல் நிலவிய பிரதேசங்களில், கண்ணிவெடிகளை அகற்றும் தேசிய வேலைத்திட்டம், 2002ஆம் ஆண்டு ஆரம்பமானது. இதன்கீழ் இதுவரையில் 137 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, மீள் குடியேற்றத்துக்காக அவை விடுவிக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில், மேலும் 28 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை 2020 ஆண்டளவில் பூர்த்தி செய்ய முடியுமென, அந்தப் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.
கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள, இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடிகளை அகற்றும் பிரிவுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago