2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

கணித பாட பரீட்சைப் பெறுபேறு கிடைக்காத வன்னி மாணவர்கள்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 06 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னி மாவட்ட பாடசாலைகளில் கல்வி கற்று 2008ஆம் ஆண்டு ஜீ.சி.ஈ சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் கணித பாடப் பெறுபேறுகள் கடந்த 30ஆம் திகதி வெளியாகியுள்ளன.

இவர்களில் சிலரின் பெறுபேறுகள் இன்னும் கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாண்டு நடைபெற்ற பரீட்சையின்போது கணித பாடப் பரீட்சை வினாத்தாளில் பிரச்சினைகள் ஏற்பட்டமை காரணமாக அதற்காக மீள 2009ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.

இதன்போது வன்னியில் போர் உச்சக்கட்டமாக இடம்பெற்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவில்லை.

இவர்கள் 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நலன்புரி நிலையங்களில் இருந்தவாறு 2008ஆம் ஆண்டுக்குரிய சுட்டெண் மூலம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இவர்களில் சிலரது பெறுபேறுகளே இன்னும் வந்து சேரவில்லை என்று கவலை தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--