Yuganthini / 2017 ஜூலை 17 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்ட சகலரையும் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும், நிர்வகித்தலும்) பணிகளை நிறைவேற்றுதலும் (திருத்தச்) சட்டமூலத்தை, திருத்தத்துடன் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பித்து, நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும், அந்தச் சட்டமூலத்தை பிறிதொரு தினத்தில் சமர்ப்பிப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், அமைச்சரவை அனுமதியுடன் நாடாளுமன்றத்தின் ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும் நிர்வகித்தலும்) பணிகளை நிறைவேற்றுதலும் (திருத்தச்) சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, விவாதத்தை நடத்தி அந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவித்தது.
31 minute ago
07 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
07 Nov 2025