2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு கிழக்கே தாழமுக்கம்

Freelancer   / 2026 ஜனவரி 08 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவுக்கு மேலாகவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது, பொத்துவிலில் இருந்து 490 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. 
 
இந்த தாழமுக்கமானது, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் கிழக்கு கரையை அண்மிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 
குறித்த தாழமுக்க நிலையானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 
 
அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .