Editorial / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் கீத் நொயாரைக் கடத்திச்சென்றுத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி வரை, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, கல்கிஸை நீதவான் நீதிமன்றம், இன்று (27) உத்தரவிட்டது.
கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதியன்று, தெஹிவளை பிரதேசத்திலிருந்து, மேற்படி ஊடகவியலாளர் கடத்திச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலை, கடந்த ஏப்ரல் மாதம் 05ஆம் திகதியன்று கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025