2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரித்த இலங்கையருக்கு எதிராக வழக்கு

Super User   / 2010 மே 12 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த நபருக்கு எதிராக கனேடிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இலங்கைச் சேர்ந்தவரான பிரபாகரன் தம்பித்துரை என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக கனடாவில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த நபருக்கு எதிராக கனடாவின் பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது

குறித்த நபருக்கு எதிரான தண்டனை எதிர்வரும் வெள்ளிகிழமை அறிவிக்கப்படவிருப்பதுடன், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .