Editorial / 2019 நவம்பர் 18 , பி.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், அவர் தலைமையில் அமையவுள்ள காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான கோரிக்கையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களான விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தைக் கலைத்து, பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரையில், தினேஷ் குணவர்தனவே பிரதமராகச் செயற்படுவார் என்றும் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி வெற்றி பெறும் பட்சத்தில், மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும், மேற்படித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago