2021 மார்ச் 03, புதன்கிழமை

’கேப்பாப்புலவு மக்கள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு’

சண்முகம் தவசீலன்   / 2017 ஜூலை 14 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

"கேப்பாப்புலவில் போராடுகின்ற முக்கியமான சிலரை அழைத்துச் சென்று, ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் சந்திப்பொன்றை ஏற்படுத்தி அவர்களுடைய குறைகளைக் கேட்டறிய வைக்கலாம் என்று எண்ணியுள்ளேன். அந்தவகையில், வருகின்ற நாடாளுமன்ற அமர்விலே, கேப்பாப்புலவில் போராடுகின்ற முக்கியமான சிலரை அழைத்துச் சென்று காணி விடுவிப்பு மேற்கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறேன்" என, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டம், இன்றுடன் (நேற்றுடன்) 135 ஆவது நாளை எட்டியுள்ளது. 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு, வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ச்சியாகப் போராடிவரும் மக்கள், ஜனாதிபதியைச் சந்திக்கப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், புதுக்குடியிருப்புக்கு நேற்று (13) வருகைதந்த, செல்வம் அடைக்கலநாதன் எம்.பியுடன் இதுதொடர்பில் வினவியபோது,  

"கேப்பாப்புலவு மக்கள், தங்களுடைய பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி, நூறு நாட்களுக்கு மேலாகப் போராடிவருகின்றனர். அவர்களுடைய காணிவிடுவிப்புத் தொடர்பில் நாம் பலமுறை பேசியிருக்கிறோம். நாடாளுமன்றத்திலும் இதுதொடர்பிலான ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை கொண்டுவந்து பேசினோம். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

"அவர்களுடைய கோரிக்கை நியாயமானது, அது நிச்சயமாக நிறைவு பெறவேண்டும் அந்தவகையில் நாங்கள் இந்த முயற்சியை  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் ஜனாதிபதி, பிரதமரோடு, மக்களை அழைத்துச் சென்று அவர்களுடைய சொந்தக் காணிகளை விடுவிப்பதற்கான முயற்ச்சியை கைகூட வைக்கின்ற ஒரு முயற்சியாக அடுத்த வாரம் இதனை செய்ய இருக்கிறேன்" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .