2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கெட் ஆட்டத்தில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபாடு

Super User   / 2010 மே 04 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதற் தடவையாக  நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இளம்  உறுப்பினர்கள் இன்று மாலை  நாடாளுமன்ற மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டபோது  தமிழ்மிரர் இணையதளத்தின் பார்வையில் சிக்கிக்கொண்டார்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ, துமிந்த சில்வா, கனகா ஹேரத், உத்தித் லொகுபண்டார மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி  உறுப்பினரான ஸ்ரீரங்கா ஆகியோர் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு, இவர்கள்  கிரிக்கெட் விளையாடுவதை அவதானித்தவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக நாடாளுமன்றம் சென்ற இவர்கள், மக்கள் மீது கவனம் செலுத்தாமல், தற்போதும் கூட சாதாரண பொது மகனைப்போன்று விளையாட்டில் நேரத்தை கழிக்கின்றனரே என அங்கலாய்த்துக்கொண்டதை தமிழ்மிரர் இணையதளம் அவதானித்தது.(R.A) 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .