2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

காரைநகர் அரச அதிபர் பணிமனையை தரமுயர்த்துமாறு கோரிக்கை

Super User   / 2010 ஜூன் 03 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுகந்தினி ரட்னம்

யாழ். மாவட்ட, காரைநகர் அரசாங்க அதிபர் பணிமனையை பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு பொது நிர்வாகத்துறை பிரதி அமைச்சர் டிலான் பெரேராவிடம்,  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

யாழ். கச்சேரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தின்போதே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக காரைநகர் பிரதி அரசாங்க அதிபர் ஆர்.ரி.ஜெயசீலன் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

இது தவிர, மேலதிக கட்டிடவசதி, பணியாளர்களுக்கான தங்குமிடம்,  தளபாடவசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தித் தரும்படியும் கோரப்பட்டதாக அவர் கூறினார்.

இந்நிலையில், ஸ்கப் இன் (Scap in ) என்ற திட்டத்திற்கமைய மேற்படி கோரிக்களை நிறைவேற்றித் தருவதாக டிலான் பெரேரா உறுதியளித்ததாகவும் பிரதி அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

யாழ். மாவட்டத்தில் காரைதீவு, நெடுந்தீவு, ஊர்காவற்துறை, மருதங்கேணி ஆகிய 4 அரசாங்க அதிபர் பணிமனைகளும், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய அரசாங்க அதிபர் பணிமனைகளும்  இன்னமும் தரமுயர்த்தப்படாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--