2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு சீனா ஒத்துழைப்பு

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய் ஆகியோருக்கிடையில் சீன தூதரகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது , இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்க சீன அரசாங்கம் தயாராகவுள்ளதாக இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பிற்காக இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அந்நாட்டு மக்களால் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .