2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

குற்றச்சாட்டுக்கு எதிராக ஐ.தே.க முறைபாடு

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணி ஐக்கிய தேசியக் கட்சி மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யவுள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி ஒன்றிணைந்த எதிரணியால் கொழும்பில் நடத்தப்பட்ட ஜனபலய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு மாளிகாவத்தைப் பகுதியில் வைத்து வழங்கப்பட்ட, பால் பக்கட்டில் விஷம் கலக்கப்பட்டு, வழங்கப்பட்டதாகத் தெரிவித்து, ஐக்கியக் தேசியக் கட்சி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சிலர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், நளின் பண்டார அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் இந்த முறைபாட்டை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X